ஆனி ஆர்ட் அக்கடமீஸ் பற்றி…

 

ஆனி ஆர்ட் அக்கடமீஸ் என்பது உலகெங்கும் ஓவியக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அத்; துறையில் பல்லாண்டுகால தீவிர பயிற்சியை வழங்கும் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். புகழ்பெற்ற ஓவியர் அந்தனி ஜே. வைச்சுலிஸ் அவர்களினால் வகுக்கப்பட்ட வெற்றிகரமான பயிற்சி முறையைப் பயன்படுத்தி ஆனி ஆர்ட்ஸ் அக்கடமீஸ் மேற்கொள்ளும் திட்டம், தர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றது. 

 

அந்தனி ஜே. வைச்சுலிஸ் அவர்கள் 1998ஆம் ஆண்டு முதல் ஓவியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். அவரிடம் பயின்றவர்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் தரமான ஓவியங்கள் சிலவற்றைப் படைத்துள்ளனர். இந்த ஓவியங்கள் விமர்சகர்களினதும் சேகரிப்பாளர்களினதும் பாராட்டுதலைப் பெற்றுள்ளன. வைச்சுலிஸின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரபல கலைக்கூடங்களின் சுவர்களை அலங்கரிப்பதுடன் தலைசிறந்த தேசிய சஞ்சிகைகளிலும் அடிக்கடி பிரசுரிக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களுக்கு அநேக பாராட்டுதல்களும் விருதுகளும் கிடைத்துள்ளன. கலையாழமும் பசுமையான தோற்றமும் நுட்பமான அம்சங்களும் கொண்ட இந்த ஓவியங்கள் பார்வையாளர்களைத் தொடர்ச்சியாகக் கவர்ந்து வருகின்றன. உலகளாவிய மட்டத்தில் கல்வி முயற்சியொன்றில் ஈடுபடும் குறிக்கோளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் 2010ஆம் ஆண்டில் வைச்சுலிஸ் கலையகத்தை அணுகியது. ஆனி ஆர்ட் அக்கடமீஸ் என்ற இப் புதிய நிறுவனம் திரு. ரிம் ரெனோல்ட்ஸ் என்பவரினால் உருவாக்கப்பட்டதாகும். பிரபல வோல் ஸ்ட்ரீட் வர்த்தக நிறுவனமான்றின் இணை ஸ்தாபகரும் ஓவிய ஆர்வலரும் ரிம் ரெனோல்ட்ஸ் மன்றத்தின் ஸ்தாபகருமான திரு. ரெனோல்ட்ஸ்ää உலகெங்கும் ஓவியக் கலைஞராக வரவிரும்புபவர்களுக்கு முறையான பயிற்சித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் கருதினார். இத்தகைய பயிற்சியின் மூலம் உருவாக்கப்படும் புதிய தலைமுறை ஓவியர்கள் தமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனை வெளிப்பாட்டினால் முன்னொருபோதும் இல்லாத அளவில் கலாசாhரத் தொடர்பாடல்களுக்குவழிகோலுவார்கள் என்பது திரு. ரெனோல்ட்ஸின் நம்பிக்கையாகும். “ஆனி” என்ற பெயர் 'யுனெதயni'  என்ற ஸ்வாஹிலி மொழி வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டது. “பாதை” அல்லது “முன்னாலுள்ள வழி” என்பது இதன் அர்த்தமாகும். திரு. ரெனோல்ட்ஸின் சிந்தனைக்கேற்ப வைச்சுலிஸ் கலையகமும் ஆனி ஆர்ட் அக்கடமீஸ{ம் இணைந்து ஏற்படுத்திய புதிய அமைப்பு இன்றைய வளரும் ஓவியர்களுக்கு அதிக மூலவளங்களையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்றது.

இன்று, உலகெங்குமுள்ள புதிய தலைமுறை ஓவிய மாணவர்கள் ஆனி அக்கடமீஸ் வழங்கும் பயிற்சித் திட்டத்தினால் நன்மையடைந்து வருகின்றனர். ஆரம்பரமான ஆனி விலாஸின் அனுசரணையுடன் நடத்தப்படும் இத் திட்டத்தில் புலமைப்பரிசில்கள்ää நிதியுதவிகள் என்பனவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

அக்கடமீஸின் பாடவிதானம் வரைபடக் கலையின் அத்தியாவசிய அடிப்படைகள், ஒளி இயல்புகள், கட்புலனுணர்வு, குறிப்பிட்டதொரு அழகியல் அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத வௌ;வேறு ஓவிய முறைகள் என்பவற்றில் கவனம் செலுத்துகின்றது. மீண்டும் மீண்டும் வழங்கப்படும் விரிவான எளிய மற்றும் சவால்மிக்க பயிற்சிகளின் மூலம் ஆனி ஆர்ட் அக்கடமீஸ் தனது மாணவர்களின் ஞானத்தையும் தொடர்பாடல் ஆற்றலையும் விருத்தி செய்கின்றது. காட்சி ஞானத்தைப் பிரயோகிக்க மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது, அவர்களின் கலைத்துவமும் தனித்துவமும் வெளியாகும்.

 

ஆனி ஆர்ட் அக்கடமீஸ் பயிற்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும் திறன்கள்ää பயிலுனர்களின் சகல யதார்த்த கலை முயற்சிகளுக்கும் அதற்கு அப்பாலும் பொருத்தமுடையதாக இருக்கும். உங்கள் ஓவியத் திறமைக்கு மெருகூட்டிää உலகளாவிய படைப்பாற்றல் வாய்ப்புக்களைப் அதிகரிக்க ஆனி அக்கடமீஸ{க்கு வாருங்கள்.